புத்தரின் 2568வது ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கொழும்பு சிறைச்சாலை நிறுவன வெசாக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சிறைச்சாலை தலைமையக வளாகத்தில் இடம்பெற்றன.

இதன்படி,  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தலைமையில் நாடளாவிய ரீதியில் உள்ள பல சிறைச்சாலை நிறுவனங்களால் வழங்கப்பட்ட வெசாக் விளக்குக் கண்காட்சி, சிறைச்சாலை பயிற்சிப் பள்ளி அதிகாரிகளின் பக்தி பாடல் கச்சேரி மற்றும் சிறைச்சாலை  அவசர நடவடிக்கை தந்திரோபாயப் படை அதிகாரிகளால் அன்னதானம்   2024.05.23 அன்று சிறைச்சாலை தலைமையக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. மேலும், மகசீன் சிறைச்சாலை அதிகாரிகளால் மரவள்ளிக்கிழங்கு அன்னதானம்  மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அதிகாரிகளால் கடலை அன்னதானம்  24.05.2024 அன்று இடம்பெற்றது.

மேலும், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலை,  நீர்கொழும்பு சிறைச்சாலை,  பதுளை சிறைச்சாலை,  பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை மற்றும் தல்தென சிறுவர் சீர்திருத்த நிலையம் ஆகிய 5 சிறைச்சாலை நிறுவனங்களின் கீழ்,  நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலை நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்கப்பூர்வமான வெசாக் விளக்குகள் முறையே பாராட்டப்பட்டன.

இந்த வெசாக் வலயத்திற்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) பி.எம்.யு.ஜி.கே.இ. பஸ்நாயக்க,  சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயல்பாடுகள் மற்றும் புலனாய்வு) காமினி பி.திசாநாயக்க,  சிறைச்சாலை ஆணையாளர் (புனர்வாழ்வு) ஜகத் வீரசிங்க,  சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் சேனக பல்லேதென்ன,  வெலிக்கடை சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஆர்.டி. தசநாயக்க,  சிறைச்சாலை ஆராய்ச்சி மற்றும் திருத்தங்கள் பயிற்சி நிலையத்தின் பயிற்சிப் பணிப்பாளர் சுஜீவ விஜேசேகர மற்றும் சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும்  அழைக்கப்பட்ட  அதிதிகள் எனப்  பலரும் கலந்துகொண்டனர்.