சிறைச்சாலைகள் திட்டமிடல் மற்றும் தகவல் தொழிநுட்பப் பிரிவினால் அபிவிருத்தி செய்யப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கான புதிய இணைய தளமொன்றினை வெளியிடல் 2020.09.24 ஆம் திகதி வியாழக்கிழமை காலை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சில் நடைபெற்றது. இச் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் திருமதி சுதர்ஷனி பிரணாந்துபுள்ளே அம்மையார், அமைச்சின் செயலாளர் திருமதி கீதாமணி கருணாரத்ன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு துஷார உபுல்தெனிய, சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம்) திரு சந்தன ஏகநாயக, சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயற்பாடுகள் /புலனாய்வு) திரு டீ. ஐ. உடுவர அவர்கள் உட்பட சிறைச்சாலைகள் திணைக்கள திட்டமிடல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.