சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளைப் காண்பதற்காக வருகைதரும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுப்பதற்காக மற்றும் சிறைச்சாலைகளில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறைச்சாலைக்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு நேரத்தை ஒதுக்கிக் கொண்டு வருகைதரும் சலுகையை வழங்குவதற்காக இணையப் பயன்பாடொன்று அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகளைப் பார்வையிடுவதற்காக வருகைதரும் பார்வையாளர்களின் நெரிசலினை குறைப்பதும், அவர்களுக்கு வசதியான நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டு வருகைதருவதால் அவர்களின் நேரத்தை மீதப்படுத்திக் கொடுப்பதும், சிறைச்சாலை சுற்றுச்சூழலில் தங்கியிருக்கும் போது ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பார்வையாளர்கள் இணையப் பயன்பாட்டிற்குள் நுழைந்து தங்களது மற்றும் கைதியின் தகவல்களும், பார்வையிடுவதற்கு வருகைதரும் திகதி மற்றும் நேரம் ஏனைய தகவல்களை பதிவு செய்வதனூடாக நேரத்தினை ஒதுக்கிக் கொண்டதன் பின் அந்நேரத்தில் சிறைச்சாலைக்கு வருகை தந்து தாமதமின்றி கைதியைச் சந்திப்பதற்கு இயலுமானதாக இருக்கும். மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் வருகைதரல் தடுக்கப்பட்டுள்ளதுடன் தொற்று நிலைமை இல்லாதொழிந்த பின்பு மேற்படி வசதிகள் பார்வையாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இவ்வமைப்பின் பகுதியொன்றாக காணொலி தொழிநுட்பத்தினூடாக பார்வையாளர்கள் கைதிகளுடன் சம்பந்தப்படுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி வழிமுறையில் அமைப்பிற்குள் நுழைந்து கைதியைச் சந்திப்பதற்காக நேரமொன்றினை ஒதுக்கிக் கொண்டதன் பின் திணைக்களத்தினால் பெற்றுத்தரப்பட்டிருக்கும் காணொலி தெழிநுட்ப வசதியின் மூலம் பார்வையாளர்களைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கைதிகளுக்கு கிடைக்கும். இச் சேவையினால் கைதிகளைப் பார்வையிடுவதற்கான வசதியை ஏற்பாடு செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் காணொலி தொழிநுட்பத்தினூடாக சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கின்ற அதேவேளை இதன் மூலம் சிறைச்சாலைகளினது மட்டுமன்றி கைதிகளினதும் பார்வையாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

 

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு துஷார உபுல்தெனிய அவர்களின் கருத்திற்கமைய சிறைச்சாலைகள் திணைக்கள திட்டமிடல் மற்றும் தகவல் தொழிநுட்பப் பிரிவினால் இவ் வலையமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இதற்கு அவசியமான கணனிப் பாகங்கள் மற்றும் விசேட காணொலிச் சாவடிகளை நிர்மாணிப்பதற்கான நிதிப் பங்களிப்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் பெற்றுத்தரப்பட்து. இவ் விண்ணப்பம் 2020/12/15 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் கெளரவ திரு லொஹான் ரத்வத்தே அவர்களினால் பைலட் திட்டமொன்றாக ஆரம்பித்து வைத்தல் நடைபெற்றதோடு இதற்காக அமைச்சின் செயலாளர் மேஜர் நாயகம் திரு வீ. ஆர் சில்வா, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு துஷார உபுல்தெனிய அவர்கள் உட்பட சிறைச்சாலைகள் ஆணையாளர்களும் பங்கேற்றனர்.