வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.எப்.லாஹீர் அவர்கள் மற்றும் வெலிக்கடை புனர்வாழ்வுப்பிரிவு உட்பட சிறைச்சாலை அலுவலர்களின் ஏற்பாட்டில் இளைஞர் மற்றும் விளையாட்டு அலுவல்கள்கள் அமைச்சர் கெளரவ திரு நாமல் ராஜபக்ஷ அவர்களின் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு கெளரவ அமைச்சர் விஷேட வைத்தியர் சுதர்ஷனி பிராணாந்து புள்ளே அம்மையாரின் தலைமையில் வழிநடத்தல் உறுப்பினர்களால் வெலிக்கடை சிறைச்சாலையினுள் இளங்குற்றவாளிகளுக்கு சதி பாசல என்னும் தர்ம செயற்றிட்டம் ஒன்றினை 2020.09.18 ஆம் திகதி மு.ப.09.00 மணியிலிருந்து பி.ப.11.30 மணிவரை நிறுவனத்தின் பன்சலைச்சாலை மற்றும் அதன் சுற்றுப்பிரதேசங்களையும் சேர்த்து நடைபெற்றது .

இதன்படி மதபோதகராக பூஜ்ய அத்துருகிறிய தம்மவிஹார சுவாமி அவர்கள் கலந்துகொள்வதோடு அழைப்பு விருந்தினர்களாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு துஷார உபுல்தெனிய அவர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு ) திரு சந்தன ஏக்கநாயக்க அவர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் (செயல்பாடு /புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ) திரு டீ.ஐ.உடுவர அவர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் (கைத்தொழில் ) திரு மலீன் லியனகே அவர்கள் சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தில் (வெலிக்கடை உப சபை ) தலைவி திருமதி சுனேத்ரா வீரசிங்ஹ அவர்கள் கலந்து கொண்டனர்