சிறைச்சாலைகளுக்குள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக எடுக்கக் கூடிய துரிதமான வழிமுறையொன்றாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியோரையும் தனிமைப்படுத்துவதற்காக நீர்கொழும்பு தலுபொத இளம் பராய குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நிலையத்தை பெண் கைதிகளை தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளிக்கும் நிலையமாக பிரகடனப்படுத்தல் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்புடன் அச் சங்கத்தின் வைத்தியர்கள் உட்பட அங்கத்தவர்களினால் 2020/11/10 ஆம் திகதி தலுபொத இளம் பராய குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நிலையத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக் கைதிகள் புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் திருமதி சுதர்ஷனி பிரணாந்துபுள்ளே அம்மையாரிடம் மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

இதன்போது சுகாதார அமைச்சின் வைத்தியர் திரு.அதபத்து அவர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு துஷார உபுல்தெனிய, சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புணர்வாழ்வு) திரு. சந்தன ஏகநாயக, சிறைச்சாலைகள் ஆணையாளர் (புலனாய்வு மற்றும் செயற்பாடுகள்) திரு. துஷித உடுவர, சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் திரு. ஹேமந்த ரணசிங்கவும், தலுபொத இளம் பராய குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நிலையத்தின் பிரதான வைத்திய அம்மையார் உட்பட வைத்தியர்களும், உதவி சிறைச்சாலைகள் அத்தியட்சகர் உட்பட பணிக்குழுவினரும் கலந்து கொண்டனர்.