நாடெங்கிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 33,000 த்திற்கும் அதிகமான சிறைக் கைதிகளை கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து பாதுகாத்து சுகாதாரப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுக்கென சுகாதாரப் பாதுகாப்பான முகக்கவசங்களை உற்பத்தி செய்வதற்கு அனுசரணை வழங்குமாறு கௌரவ சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு துஷார உபுல்தெனிய அவர்களினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரப்பட்ட வேண்டுகோளின்படி அச் சங்கத்தினால் பெற்றுத்தரப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி மகர சிறைச்சாலைகள் அத்தியட்சகர் திரு ஜகத் வீரசிங்க உட்பட அலுவலர்களின் மேற்பார்வையின் அடிப்படையில் மகர சிறைச்சாலைகள் கைத்தொழிற் பிரிவில் சேவையாற்றும் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளின் முதற் கட்ட நடவடிக்கையின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட 15,000 முகக்கவசங்கள் சிறைச்சாலைகள் தலைமையகத்திடம் நேற்று கையளிக்கப்பட்டது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்நாட்டு பிரதான அலுவலகப் பாதுகாப்பு பிரதிநிதி திருமதி ராஷா மொஹமட் உட்பட அலுவலர்களினால் இத்திட்டத்திற்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களும் சிறைச்சாலைகள் தலைமையகத்திடம் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் சுகாதாரப் பாதுகாப்புடனும் மற்றும் தரமானதுமாக இந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் சம்பந்தமாக மகர சிறைச்சாலைகள் புணர்வாழ்வுப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தொழில் ஆலோசக அலுவலர்களுக்காக கொழும்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகத்தில் அடிப்படை விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்றும் நடைபெற்றது. பின்னர் இரண்டாம் கட்டமாக முகக்கவசங்கள் 25,000 ம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருட்கள் மீண்டும் பெற்றுத்தரப்பட்டதுடன் இதனால் இத் திட்டத்தின் இறுதியில் இலங்கையில் அனைத்து சிறைச்சாலைகள் அமைப்புக்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக் கை திகளுக்காக 40,000 முகக்கவசங்கள் உற்பத்தி செய்யப்படும் வேளையில் தற்போது அதன் இறுதிக் கட்டத்தில் அலுவல்கள் மகர சிறைச்சாலைகள் கைத்தொழிற் பிரிவிற்குள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.