2020.06.08 ஆம் திகதி சுபவேளையில் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக திரு. துஷார உபுல்தெனிய அவர்கள் கடைமையை பொறுப்பேற்றார். அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று சிறைச்சாலைகள் தலைமையகத்தில் நடைபெற்றதோடு அவருக்கு விசேட வரவேற்பும் அதில் விருந்தினர்கள் மற்றும் மூத்த சிறைச்சாலைகள் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.

2001 ஆம் ஆண்டு உதவி சிறைச்சாலைகள் அத்தியட்சகராக சிறைச்சாலைகள் திணைக்களத்தில் சேவைக்கு இணைக்கப்பட்ட இவர் வெலிக்கடை, போகம்பரை, காலி, கேகாலை, குருவிட்ட போன்ற சிறைச்சாலைகளிலும், சிறைச்சாலைகள் அத்தியட்சகராக கொழும்பு ரிமாண்ட், மகர மற்றும் சிறைச்சாலை ஆராய்ச்சி மற்றும் திருத்த பயிற்சி மையத்திலும், மூத்த சிறைச்சாலைகள் அத்தியட்சகராக சிறைச்சாலைகள் தலைமையகத்திழும் கடமைகளை மேற்கொண்ட சிறைச்சாலைகள் ஆணையாளராக உயர்நிலை பெற்று சிறைச்சாலைகள் ஆணையாளர் (உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு), (செயல்பாடு), (நிர்வாகம்), (வழங்கல்) எனும் பதவிகளிலும் கடைமைகளைச் சரியாக மேற்கொண்டு திணைக்களத்தில் கிட்டத்தட்ட 2 தசாப்தகால சேவையில் அனுபவம் கொண்ட மூத்த அலுவலராவார்.

பொலன்னறுவை ராஜகீய வித்தியாலயத்தில் மற்றும் கண்டி தர்மராஜா வித்தியாலயத்தில் கல்விபயின்று களனி பல்கலைக்கழகத்தில் பொருளியல் விஞ்ஞானம் சம்மந்தமான கலை இளங்கலை கௌர பட்டத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ ஆய்வுகள் சம்மந்தமான முதுகலை டிப்ளோமாவையம், ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் குற்றவியல் விஞ்ஞானம் சம்மந்தமான டிப்ளோமா பட்டத்தையும், அவுஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகத்தில், மனித உரிமைகள் தொடர்பான மாஸ்டர் பட்டத்தையும் பெற்று இதற்கு மேலதிகமாக உள்நாட்டு பயிற்சி கற்கைநெறிகள் பலவற்றில் கலந்து கொண்டு புலன்கள் பற்றிய ஞானம் கொண்டு ஒரு சிறந்த அலுவலராகத் திகழ்கிறார்.