மூத்த சிறைச்சாலைகள் அலுவலர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட ” தொழில் கருவுறுதல் ” சம்மந்தமாக முதல் நிகழ்வு 2020 ஜூன் 18, வியாழக்கிழமை கொழும்பு சினமண் லேக்சைட்டில் நடைபெற்றதோடு பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் நாயகம் கமல் குணரத்ன, நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. மரீனா மொஹமட், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு. துஷார உபுல்தெனிய அவர்கள் சிறப்பு பேச்சாளர் துணை பொலிஸ்மாதிபர் திரு. அஜித்ரோகன அவர்கள் மற்றும் விரிவுரையாளர் திரு. தம்மிக கலபுகே அவர்கள் ஆகியோர் தொடக்க அமர்வில் பங்கேற்றனர்.

இந் நிகழ்வில் சிறைச்சாலைகள் ஆணையாளர்கள், சிறைச்சாலைகள் தலைமையகத்தின் பிரிவுத் தலைவர்கள், மூத்த சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை அத்தியட்சகர்கள் மற்றும் உதவி சிறைச்சாலைகள் அத்தியட்சகர்கள் பங்கேற்றனர்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தரத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பது தொடர்பான சொற்பொழிவொன்று பதில் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோகன அவர்களினால் நடைபெற்றதோடு பின்னர் தொழில் நிபுணத்துவத்தின் சிறப்பினை பற்றி சொற்பொழிவொன்றினை திரு. தம்மிக கலபுகே அவர்களினால் மேற்கொள்ளபட்டது