நாட்டினுள் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை புறக்கணத்தித்து தன்னிடம் வரும் நோயாளிகளை சுகமாக்குவதற்கு கடினமாக உழைக்கும் சுகாதார பணிக்குழு உறுப்பினர்களின் சேவையயை பாராட்டுதல் மற்றும் அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகர சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஜகத் சந்தன வீரசிங்க அவர்களின் ஆலோசனைகள் மற்றும் மேற்பார்வையின் கீழ் சிறைக்கைதிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட மேலும் பாதுகாப்பு ஆடைகள் சிலாபம், மாரவில மற்றும் புத்தளம் பொது மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்குதல் சமீபத்தில் (2020.05.22) மகர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூரில் வசிக்கும் கணணிப் பொறியியலாளர் திரு. அமில சில்வா, அயர்லாந்தில் வசிக்கும் திரு. நிபுண பெரேரா, மொரட்டுவ கணனி பொறியியலாளர் பீடத்தில் திரு. ஹேகம ரவீண் உட்பட நண்பர்கள் சிலரினால் ஆரம்பிக்கப்பட்ட http://slsecure.online இணையத்தளமூடாக கிடைக்கும் வேண்டுகோள்களின் அடிப்படையில் மகர சிறைச்சாலை அத்தியட்சயர்களின் பூரண ஏற்பாட்டில் கீழ் மகர சிறைச்சாலையின் தொழிற் பயிற்சிகளைப் பெரும் நீண்டகாலமாக சிறைத்தண்டனையைப் பெற்று வரும் கைதிகளை மிகுந்த ஆர்வத்துடன் இவ் ஆடை உற்பத்திகாக தமது அர்ப்பணிப்பை பெற்றுத் தந்துள்ளனர் பொரளை Spruce Clothing நிறுவனத்தில் திருமதி. ரங்கா தாப்ரூ மெண்டிஸ் அம்மையாரினால் தையற்றொழில் கற்கை நெறிக்கென கைதிகளுக்கு அவசிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்கின்றனர்.

சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, அவுஸ்திரெலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் இலங்கையில் வசிக்கும் இலங்கை நண்பர்கள் சிலரினால் இத் திட்டங்களுக்காக மூலதன அனுசரணை பெற்றுத்தரப்படுவதோடு மகர சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் சந்தன வீரசிங்க அவர்கள் நியமிக்கும் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.எம்.பி. ஹென்னநாயக அவர்களினால் சிலாபம் பொது மருத்துவமனையின் பணிப்பாளர் கபில பிரியந்த அவர்களிடம் இந்த பாதுகாப்பான உடைகள் வழங்கப்பட்டது