மகர சிறைச்சாலை டெனிஸ் மைதானத்தை திறந்து வைக்கும் உற்சவ பங்கேற்பில் பிரதான அழைப்பு விருந்தினர் என்ற வகையில் கலந்து கொண்ட சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு கௌரவ இராஜாங்க அமைச்சர் சுதர்ஷன் பிரணாந்து புள்ளே அம்மையார் அவர்கள் உட்பட இறுதியில் மகர சிறைச்சாலையின் கண்காணிப்பு சுற்றுலாவில் கலந்து கொண்டார்.

இக் கண்காணிப்பு சுற்றுலாவில் விசேடமாக கொரோன தொற்றுநோய் நேரத்தில் மகர சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஜகத் வீரசிங்க அவர்களின் தலைமையின் கீழ் இந்நாட்டு பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதாரப் பிரிவுக்காக பாதுகாப்பு உடைகள் உற்பத்தி செய்வதற்காக தமது பங்களிப்பை வழங்கிய கைதிகள் சேவை செய்யும் மகர கைத்தொழில் பிரிவு கௌரவ அமைச்சின் அம்மையாரின் கவனத்திற்கு பாத்திரமான வேளையில் நாட்டுக்கான அக் கைதிகள் வழங்கிய பங்களிப்பு அம்மையாரின் விசேட கவனத்தை ஈர்த்தது.

மகர சிறைச்சாலை கைத்தொழில் பிரிவிற்குள் நடைபெற்ற தொழில் பயிற்சி கற்கைநெறிகள் அனைத்தும் கண்காணித்த அமைச்சின் அம்மையார் மகர சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்க அவர்கள் உட்பட சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்களின் அர்பணிப்பை தாம் பாராட்டுவதாக கண்காணிப்பு சுற்றுலாவின் பின் வருகை தந்த ஊடகவியலாளர்களின் உரையாடலில் கூறப்பட்டது இப் பங்கேற்பில் அமைச்சின் செயலாளர் கீதாமணி கருணாரத்ன கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் பிரதீப் விதான, மகர பிரதேச சபையில் கௌரவ தலைவி சுதீமா சாந்தணி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய அவர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் (கைத்தொழில்) மலீன் லியனகே அவர்கள் சிறைச்சாலைகள் ஆணையாளர் (வழங்கல்) கே.ஏ. எஸ். கொடிதுவக்கு அவர்கள், மகர சிறைச்சாலை அதிகாரி
ஜகத் வீரசிங்க அவர்கள், பிரதான ஜெயிலர் சுபாஷ் உபுல்தெனிய என்போர் பங்கேற்றார்கள்.