மகர சிறைச்சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு மைதானத்தை திறத்தல் மற்றும் கல்வித் திறன்களை வெளிக்காட்டிய உத்தியோகத்தரின் பிள்ளைகளுக்கு மற்றும் ஓய்வு பெற்ற மகர சிறைச்சாலை அலுவலர்களுக்கு உபகாரணங்களைச் செலுத்தும் உற்சவம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு சம்மந்தமாக கௌரவ இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பிரணாந்து புள்ளே அம்மையார், கூட்டுறவு சேவைகள், விற்பனை அபிவிருத்தி மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக கௌரவ இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவத்த அவர்கள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீதாமணி கருணாரத்ன. கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சனத் பிரதீப் விதான அவர்கள், மகர பிரதேச சபை கௌரவ தலைவி சுதீமா சாந்தணி அம்மையார், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய அவர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர்கள் உட்பட மாண்புமிகு விருந்தினர்கள் சிலரின் பங்கேற்பில் புகழ்பெற்றவர்களினால் நடாத்தப்பட்ட வேளையில் இவ் உற்சவம் புதிய கௌரவ இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பிரணாந்து புள்ளே அம்மையார் பங்கேற்ற முதல் அதிகாரபூர்வ உற்சவமாகும்.

மகர சிறைச்சாலை அதிகாரி ஜகத் வீரசிங்க அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி உதவி அத்தியட்சகர் ஜகத் திசாநாயக்க, பிரதான ஜெயிலர் சுபாஷ் உபுல்தெனிய எனும் அலுவலர்களின் மேற்பார்வையில் மகர சிறைச்சாலைகள் விளையாட்டு மைதானம் மற்றும் நலன்புரி சங்கத்தின் முதலீட்டு அனுசரனையினூடாக மகர சிறைச்சாலைகள் விளையாட்டு வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த டெனிஸ் விளையாட்டு மைதானம் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 2ம் டெனிஸ் மைதானமாக இடம்பிடித்துள்ளதோடு சிறைச்சாலைகள் அலுவலர்களுக்கிடையே டெனிஸ் விளையாட்டை பிரபல்யம் செய்யும் முகமாக இவ் விளையாட்டு மைதானம் உதவும்.

அத்துடன் கடந்த வருடங்களில் கல்வித்திறன்களை காட்டிய மகர அலுவலர்களின் குழந்தைகள் மதிப்பீடு செய்யப்பட்டு ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் அலுவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விழாவும் இதற்கு ஒத்ததாக நடைபெற்றபோது இதற்கு மேலதிகமாக தெரிவு செய்யப்பட்ட நியதிகள் சிலவற்றுடன் தற்போது சேவையிலுள்ள அலுவலர்களை ஊக்கமளிப்பதற்காக பரிசுகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் கொடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட அழைப்பு விருந்தினர்களுக்கு மகர கைதிகளினால் தயாரிக்கப்பட்ட சிறப்பு நினைவுப் பரிசுகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்ட வேளையில் மகர கைதியொருவரினால் நிர்மாணிக்கப்பட்ட ஓவியம் அம்மையாரின் விசேட கவனத்தை ஈர்த்தது.