சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு. துஷார உபுல்தெனிய அவர்களின் அழைப்பில் கௌரவ நீதிவான் திரு. தப்புல லிவேரா மற்றும் நீதிபதி திணைக்களத்தில் மூத்த பணியாளர் கொழும்பு விளக்கமறியற் சிறைச்சாலையை பார்வையிட வருகை தந்ததோடு இங்கு நீதிபதி அவர்களினால் சிறைச்சாலைகளினுள் நடக்கும் சட்டவிரோத செயல்களின் தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் அதன் பெறுபேறுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு. ஏற்படும் தாக்கங்கள் பற்றி சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மூத்த அலுவலர்கள் சார்பாக சொற்பொழிவொன்று சிறைச்சாலைகள் ஆராய்ச்சி மற்றும் திருத்தப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இச் சந்தர்ப்பம் கௌரவ நீதிபதியொருவர் சிறைச்சாலை நிறுவனமொன்றினைப் பாரவையிடுவதற்காக உத்தியோகபூர்வமாக விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.