போதைப் பொருட்கள் மற்றும் குற்றங்கள் சம்மந்தமாக ஐக்கிய தேசிய அலுவலகம் (UNODC – United National Office On Drugs and Crime) மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர்கள், மூத்த சிறைச்சாலைகள் அத்தியட்சகர்கள், அத்தியட்சகர்கள் மற்றும் உதவி அத்தியட்சகர்களுக்காக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் சம்மந்தமாக இரண்டுநாள் கற்கைநெறி 2020/08/22 மற்றும் 23 தினங்களில் கொள்ளுபிட்டிய மூவின்பிக் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு வரவேற்பு நிகழ்வுக்ககாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு கௌரவ இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பிரணாந்து புள்ளே அம்மையார் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் கீதாமணி கருணாரத்ன அம்மையார் ஐரோப்பிய ஒன்றிய தூதர் திரு. டெனிஸ் சைபி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய அவர்கள் மற்றும் UNODC நிகழ்ச்சியில் இலங்கை மற்றும் மாலைதீவு அலுவலகத்தின் முதல்வர் ட்ரெஎல்ஸ் வெஸ்டர் அவர்கள் பங்கேற்றனர்.